Adi Podi Sandali Song Lyrics – Pottu Movie

Category: Tamil Songs 42 0

Adi Podi Sandali Song Lyrics in Tamil

அடிப்போடி சண்டாளி
உன்னால நான் பறக்கிறேன்

ஒரு பார்வை பார்த்தாலே
தன்னால தான் மெதக்குறேன்

அட பச்சரிசி பல்லுக்குள்ள அரைக்கிற- கொஞ்சம்
மிச்சம் வைக்கக் கேட்டாலுமே மறுக்கிற…

அட அச்சுவெல்லக் கட்டிபோல இனிக்கிறே-என்னை
அக்கு வேரா ஆணி வேரா பிரிக்கிறே…

இது ஏதோ வரமா
புதிதான சுகமா?

அடப் போய்யா கண்ணாடித்
துண்டாகத்தான் துளைக்கிற

அது ஏன்யா நஞ்சாகி
நெஞ்சோடுதான் கலக்கிற

வெரவெரன்னு வெரட்டுற நீ
விழி உருட்டி மெரட்டுற

தொரதொரன்னு தொரத்துற நீ
தோசைக்கல்லுல பொறட்டுற

நீ…கட்டுச்சோத்துக்குள்ள வந்த எலி
கள்ளத்தனத்துல நீயும் புலி

கட்டியணைச்சும் போகாதடா
கட்டில் கிடைச்சும் தீராதடா

காதல், கட்டில் கிடைச்சும் தீராதடா

அடிப்போடி சண்டாளி
உன்னால நான் பறக்கிறேன்
அது ஏன்யா நஞ்சாகி
நெஞ்சோடுதான் கலக்கிற

கடகடன்னு கடத்துற நீ
கன்னக்குழியில் புதைக்கிற

படபடன்னு படுத்துற நீ
பாதி உசுரை அழிக்கிற

நீ… உச்சந்தலையில வந்து நின்னு…
உள்ள வீசுற கத்தி ஒண்ணு…

உன்னை கொஞ்சி நான் பாக்கிறேண்ட…
இந்த நெஞ்சுல தாங்குறேண்டா… நான்..
இந்த நெஞ்சுல தாங்குறேண்டா…

அட பச்சரிசி பல்லுக்குள்ள அரைக்கிற- கொஞ்சம்
மிச்சம் வைக்கக் கேட்டாலுமே மறுக்கிற…

அட அச்சுவெல்லக் கட்டிபோல இனிக்கிறே-என்னை
அக்கு வேரா ஆணி வேரா பிரிக்கிறே…

இது வேண்டும் வரமா…
புதிதான சுகமா…

Related Articles

Add Comment