Nee Malara Song Lyrics – Arputham Movie

Category: Tamil Songs 105 0

Nee Malara Song Lyrics

நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

நீ மழையா
மழையா மழையானால்
எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே
ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பிறந்தாயே
எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும்
ஒரு தாயே நீ மலரா
மலரா மலரானால் எந்தன்
பேரே பூவாசம்

வாழாமலே வாழ்ந்த
நாள் எந்த நாளோ

பார்க்காமல் நாம்
இருவரும் இருந்த நாள்

அட காதல்
என்பதென்ன இன்ப
சிகிச்சை

இது இரண்டு
நபர் ஒன்றாய் எழுதும்
பரீட்சை

தினம்
உன் பேரயே நான் கூறியே
உயிர் வாழ்கிறேன்

நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

 

ம்ம் காற்றோடு
நான் ஈரமாய் சேர்கிறேன்

மரமாகி நான்
ஈரத்தை ஈர்க்கிறேன்

என் அந்தபுரம்
எங்கும் சாரல் அலைகள்

என் நந்தவனம்
எல்லாம் ஈர இலைகள்

ஒரு
மழையோடு தான்
வெயில் சேர்ந்ததே
நம் காதலே
நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

நீ மழையா
மழையா மழையானால்
எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே
ஜோடி ஜீவன் வாழுமே

உயிரே உயிரே

பிறந்தாயே
எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும்
ஒரு தாயே

Related Articles

Add Comment